Tuesday, July 14, 2009

நீ வைரமா ? முத்தா ?

என் கவித்தலைவனுக்கு....
என் முதல் கவிதை.
கல் என்றாலும்...
தன் பிராத்தனை கேட்கப்படும்
என்று நம்பும் பக்தனைப் போல்
எப்படியும் ஒரு நாள் இந்த மடல்
உன்னை சேரும் என்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன்

ஜூலை 13.... இந்த நாள்
தமிழ் வரலாற்றில் ஒரு சகாப்தம்
தமிழின் பக்கங்களில்.....
நீங்காத நினவு சின்னம் !!!
தமிழ் அன்னை பெற்றெடுத்தாள் ஓர் தேவ தூதன் !
பிறக்கும் பொழுதே.......
அழுகைக்கு பதில்,
கவிதை தமிழில் சத்தம் இட்டு பிறந்தவன்.
தன்னை விட தமிழை நேசிப்பவன்!
தமிழுக்கு அரசன் !
என்றும் கவிபேரரசன்...
என் வைரமுத்து !

மூட்டைகளில் அரிசி தந்த பகலவனுக்கு....
காணிக்கையாய், ஒரு படி அரிசி தரும்
ஓர் ஏழை உழவனைப் போல்.
என் தமிழ் சூரியனுக்கு
ஏழை கவிஞனின் ஒரு படி அரிசி !!

எங்கு ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது ?
சமுத்திரத்தை எப்படி
ஒரு குவளைக்குள் அடைப்பது ?
விண்ணை ஒரு புள்ளியில்
அடைப்பது எப்படி சாத்தியம் ?
உனக்கு பிடித்த பாஷையில் சொல்ல வேண்டும் என்றால்....
"தண்ணீர் தேசத்தை"...
எப்படி ஒரு வார்த்தையில் சொல்வது !!!

நீ பேனா எடுத்தால்....
சஹாராவிலும் சுனாமி வரும்!
கல்லறைகளிலும் ஆனந்த பைரவி !
விலைமகளும் கண்ணகியாய்!
விலங்குகளுக்கும் ஆறறிவு !
தெரு பெருக்கியும் ஓர் பில் கேட்ஸ் !
மரங்களுக்கும் மாலைகள் விழும் !
மண்ணும் பொன்னாய் !
கூவமும் நையகரவாய் !
தமிழின் உயரம் தொட்டவன் நீ...........

உண்மையை சொல்..
ஒரு நாள் தமிழ் தாய்க்கு
மகுடம் சூட்டுவாய் என்றறிந்து தானே
"வைரமுத்து" என்று பெயரிட்டாள் உன் அன்னை

உன்னை தமிழின் உச்சம் என்பதா ?
கற்பனைகளின் உச்சம் என்பதா?
கலையின் உச்சம் என்பதா?
இல்லை கவிகளின் உச்சம் என்பதா?
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்
இன்றைய கவிஞர்கள் அனைவரும் உன் மிச்சம்!
உன் மூச்சு காற்று பட்டே
இங்கு கவிஞர்கள் ஆனவர்கள் பலர்.....
என்னையும் சேர்த்து
உனக்கு எப்படி பாரதி, கண்ணதாசனோ
அப்படி தான் எனக்கு நீ!!

என் கவிதைகளுக்கு
விதையிட்டது என்னவள் என்றாலும்
நீர் ஊற்றியது நீ !
என்னை கவி எழுத
பேனா எடுக்க வைத்தது காதல் என்றாலும்.
அதற்கு மை ஊற்றியவன் நீ !!
நீ தமிழை நேசிப்பவன் மட்டும் அல்ல
தமிழை சுவாசிப்பவன் என்பது தான் உண்மை !

ஓவ்வொரு முறை
உன் கரு மேனியையும்
வெண்ணிற ஆடைகளையும்
பார்க்கும் போது....
தமிழுக்கும் நிறம் உண்டு
"கருப்பு வெள்ளை "
என்கிற எண்ணம் என் மனதில் ஆழ பதியும்.

உழக நாயகனின் கை அசைவை கூட
நடிப்பு என்று வாதாட ரசிகர்கள் உள்ளது போல்.
இசை புயலின் இருமலை கூட
மெல்லிசை என்று கேட்கும் விசிறிகளை போல்.
உன் மௌனத்தையும்
கவிதையாய் பார்க்கும்
ஓர் பைத்தியம் நான் !

உன்னை பற்றி எழுதும் போது தான்
வார்த்தை பஞ்சம்
எனக்கு ஏற்பட்டதில்லை !

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
பெருமிதம் கொண்டாள் தமிழ் அன்னை
உன்னை பெற்றதால் !!
நீ வாழ்க... உன் வழி தமிழும் வாழ்க
பல்லாண்டு !!!!!!!


9 comments:

  1. நல்லா இருக்கு டா .. இதை அவருக்கு அனுப்பி விட்டாயா????????

    ReplyDelete
  2. @ Elakki: not yet machi.... epdi anupradhu nu theriyala.....

    ReplyDelete
  3. Very nice ji...oru naal adhu nadakum...

    ReplyDelete
  4. @ Naveen: Thanks ji... :) :) nambikai thaan.....

    ReplyDelete
  5. அருமையான கவிதை
    நல்ல வரிகள்
    நடையும் சிறப்பாக உள்ளது.
    பாராட்டுகள்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. அன்பின் கார்திக் விக்ரமன்... என் மன்னிக்கவும் நம் ஞானகுரு வைரமுத்துவைப் பற்றிய உங்கள் கவிதை அருமை... பிரமாதம்... நீங்கள் வைரமுத்து ரசிகரா... நான் வைரமுத்து வெறியன்... அவருடைய ஒவ்வொரு நாவலையும், கவிதைத் தொகுப்பையும், கட்டுரைத் தொகுப்பையும் குறைந்தது 10 முறையாவது வாசித்திருக்கிறேன்....

    /*ஓவ்வொரு முறை
    உன் கரு மேனியையும்
    வெண்ணிற ஆடைகளையும்
    பார்க்கும் போது....
    தமிழுக்கும் நிறம் உண்டு
    "கருப்பு வெள்ளை "
    என்கிற எண்ணம் என் மனதில் ஆழ பதியும்.*/

    எனக்கும் அதே அதே!!!

    ReplyDelete
  7. @Diya: Thanks a lot diya! My best wishes for u too....

    @Ramkumar: மனமார்ந்த நன்றிகள் ! நான் வைரமுத்துவின் வெறியன் இல்லை என்றால் கூட.... அவரின் பிரியன் ! என்றும்,....................

    ReplyDelete
  8. மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  9. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete