Saturday, August 25, 2012

மெர்குரி !


என் மனம் அப்படி தான்
பருவ நிலை மாற்றம் போல்
திடிரென்று உச்சி வெயில் அடிக்கும்
மழை அடித்து ...
வெள்ளம் பெருக்கெடுக்கவும் செய்யும்!

Tuesday, November 8, 2011

குழந்தை தொழில்


*****தீபாவளி அன்று எழுதியது *******
அம்மா இந்த வெடி வாங்கி தாமா
என்ற படி ஒரு சிறுவன்
அம்மா இந்த வெடி வாங்கிகோங்கமா
என்ற படி இன்னொரு சிறுவன் 
ஒரே ஒற்றுமை யாதெனில் 
இருவருக்குமே பட்டாசு "வாங்கினால்" தான் தீபாவளி :(

Friday, February 18, 2011

எனக்காய்..



என்னால்..
தலை சுற்றுமாம்.
அடி வயிறு புரட்டுமாம்
தூக்கம் தூரமாய் போகுமாம்
பத்தாம் மாதம், உயிர் போய் உயிர் வருமாம்..
அன்னையாய் அவள்...

எனக்காய்..
சொந்தங்கள் அன்னியம் ஆனதாம்
கண்ணீர் மட்டும் சொந்தம் ஆனதாம்.
பூவுக்கு பிறந்தவள், முட்களுக்கு வாக்கபட்டாள்
சுற்றம்
எதிர்த்தால்
வீட்டிலும் ஒரு வேற்று க்ரஹ வாசியாம்
பொறுத்தால் அத்தனையும்
என்னவள் அவள்

Aristotle என்ன? Socrates என்ன?
"தாய்க்கு பின் தாரம்" என்று சொன்னவன் எவனோ அவனே... ஞானி!