Wednesday, March 31, 2010

VINNAI THAANDI VARUVAAYAA ! - A Yet Another “Review” கொஞ்சம் late a…… :)



(முன் குறிப்பு : படத்தை ரசித்தவர்கள் மட்டும் படிக்கவும், Others, Please Swith off this TV right here. First case ku….. காதலி கையில் கிடைத்த காதலனின் letter மாதிரி தான்... ரசிக்கலாம், (atleast ரசிக்க try பண்ணலாம்... ) Second case ku… அதே letter பொண்ணோட அப்பன் கைல கிடச்ச மாதிரி படிக்க படிக்க எரிச்சல் தான் வரும்... :) :) )

தாக்கம் குறைவதற்கு முன் , என் காதல் கரைவதற்கு முன் எழுதி விடுகிறேன்........
விண்ணை தாண்டி வருவாயா , விண்ணை தாண்டி என்னை அழைத்து சென்றது என்பதே உண்மை.
ஓர் மூன்றாம் பிறை, குணா, ரெயின்போ காலனி, கற்றது தமிழ் என என் அடி மனம் தொட்ட, என்னை அழுத்திய படங்களின் பட்டியலில் இடம் கண்டது இந்த விண்ணை தாண்டி வருவாயா... மேற்ச்சொன்ன படங்களுக்கும் இதற்கும் உள்ள ஒரே வித்யாசம்…… அவை எல்லாம் “முத்தழகு” (பருத்திவீரன் ) மாதிரி, இது “Jessie ” மாதிரி.. CLASSY !

என் ஒரு நாள் இரவின் தூக்கத்தை முழுதாய் சிறையிட்ட கதை ! (இன்னும் எத்தனை பேரின், எத்தனை நாள் தூக்கம் பறிபோனது என்பது நான் அறியாத ஒன்று....)

எத்தனையோ படம் ரிலீஸ் ஆகியும் நான் ஏன் விண்ணை தாண்டி வருவாயா மட்டும் பார்க்கணும் நு ஆசை பட்டேன்....
ஒரு படம் நா.. உள்ள இருந்து வரணும், நம்மள போட்டு தாக்கனும், அப்டியே தலகிழா போட்டு திருப்பனும். எத்தன தடவனாலும் பார்த்துட்டே இருக்கனும் நு தோணனும்... கைல பத்து பைசா இல்லேன கூட, கடன் வாங்கியாவது பத்து தடவ "சத்யம்" ல பார்க்க சொல்லணும்... அதான் good movie !

Actual ah,… என்ன அடிச்சது இந்த படம்
இதான் VTV..., ரொம்ப அழகு, CLASSY, Well-written, படத்துல ஒரு STYLE இருக்கு, and LOVELY TOO !



Vijay TV Gobi review, Balachander letter to gautham, மக்கள் என அத்தனையும் கேட்ட பின் உடனே பார்த்து விட தோன்றியது...

"இப்போது என்னவளை பார்க்க துடிக்கும் மனம் போல்...."
பார்த்தேன், ரசித்தேன், லயித்தேன்,
அங்கங்கு கண்ணீர் துளிகள் சிந்தினேன்.....பாடம் கற்றேன்.
அத்தோடு, என்னவளின் இந்நிலை அறிந்தேன்...
அவள் சிந்தும் கண்ணீர் துளிகளின் ஈரம் கண்டேன், வழி கண்டேன்.
இதுவும் படத்தின் ஓர் வெற்றியாய் நினைக்கிறேன் !

விண்ணை தாண்டி வருவாயா? என்று காதலோடு கேட்டவனிடம்... "வானம், இரவு, நட்சத்திரம் " என உறவுகளை கை காட்டும் நிலவின் கதை….
காதலின் அத்தனை உணர்வுகளையும், சித்திரமாய், கவிதையாய், மெல்லிசையாய் , மனம் தொடும் விதத்தில் அழகாய் தந்ததற்கு முதல் நன்றி கௌதமிற்கு …. என்னை, என்னவளை... என் நண்பனை, அவன் உணர்வுகளை… உணர்வுகள் குறையாமல் பார்த்தேன்... எங்கள் சொந்த கதை எப்படி களவு போனது என்று நான் மெய் மறந்ததும் உண்மை !

Special thanks………..
இசைக்கு இசை புயலின் கையை பிடித்ததற்கு , இப்போ தான் உங்க (கௌதம்) film COMPLETE ah இருக்குனு நினைக்றேன். எனக்கு தெரிஞ்ச பாஷைல சொல்லனும்னா... இவ்ளோ நாள் US CLIENT MEETING க்கு வேஷ்டி சட்டை ல போய்டு இருந்தீங்க, இப்போ தான் உங்களுக்கு அடி மனசல பட்டு இருக்குனு நினைக்றேன். அது முட்டாள் தனம்... BLAZAR than best nu :) :) :)




இப்படி தான் கதை தளம் அமைகிறது ….. அவள் தான் உலகம் என்றவனாய் KARTHICK,
உண்மை உலகம் அறிந்தவளாய் JESSIE…
நாம் பார்த்து பழகிய, நம்முள் ஒருவன் அவன்
"திரையில் மட்டும்" காணாத பெண்ணாய் அவள்….

உலகம் SCIENCE, Technology என அத்தனை துறைகளிலும் ஒவ்வொரு நாளும் அடுத்த தளத்திற்கு முன்னேறினாலும் ... காதலை பொறுத்தவரை, தமிழன்.. சங்கிலி பூட்டிய கோவில் யானையாய் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறான்.... காதலுக்கு கருப்பு கொடி தூக்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. இது தான் கதை !

பார்த்து பழகிய காதல் கதை என்றாலும்,
திரைக்கதை, இசை, வசனங்கள் என அத்தனை துறைகளிலும் நுணுக்கம், அழகு !
கௌதம் படம் என்றால் எனக்கு மூன்று எதிர் பார்ப்புகள் எப்போதும் முன் வந்து நிற்கும், ஒன்று: பாடல்கள், இரண்டு: வசனங்கள், மூன்று: நாயகியை அழகாய் திரையில் பதிக்கும் விதம்... இந்த மூன்று எதிர்பார்ப்புகளையும் அடுத்த படத்திற்கும் தொடர வைத்து இருக்கிறார் கௌதம் ! அத்தனையும் அருமை

குறிப்பாக….
“யாரும் உன் கண் வழிய என்ன பார்த்து இருக்க மாட்டாங்க நு நினைக்றேன் கார்த்திக்.... “
“ என் வாழ்கையின் அழகான இரண்டு நிமிடங்கள்.... “
“ எல்லாம் முடிஞ்சுரிசுனு நினச்சேன், நினைக்காத முடிஞ்சுதான் போச்சுன்னு சொன்னா... “
“ Its all oven up karthick “
“ அவ சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே தெரியும் நான் கேரளா போவேன்னு.. அவன் அவன் America கே போறான்... “
“அப்புறம்.. Street la பார்த்து I LOVE U நு சொன்னேல அப்போ ரொம்ப கோபம் வந்துது.. எங்க என் கண்ல இருந்த காதல் உனக்கு தெரிஞ்சு போச்சோனு !

என அத்தனை வசனங்களும்… படித்த உடன் மனதில் பதிந்து கொள்ளும் ஹைக்கூ கவிதைகளாய், நெஞ்சில் Fevicol இட்டு ஒட்டிகொண்டது...

ARR இன் இசை...... VTV க்கு vitamin tablets !
படத்தோட ஜீவன், இதயத்துடிப்பு நு சொல்லாம்....
சந்தனத்தை மயில் இறகில் தொட்டு நெஞ்சில் தடவிய அனுபவம்.... குளிர்ச்சி !

My personal fav is Aaromale... ஒவ்வொரு முறை "ஆரோமலே" பாடல் கேட்கும் அந்த 5 நிமிடத்தில், மனதில் அங்காங்கே ஒட்டி கொண்டிருக்கும் காயங்கள் "ஆறுவதாய்" உணர்கிறேன் !

ரஹ்மானின் இசையும், மனோஜின் Cinematography um இல்லை என்றால்.. விண்ணை தாண்டி வருவாயா உப்பு காரம் இல்லாத சாம்பார் தான்....
Simple ah சொல்லணும் நா… music இல்லாத விண்ணை தாண்டி வருவாயா. Sachin இல்லாத Indian team.



அடுத்ததாய் பாடல்கள்... நான் மிகவும் ரசித்த வரிகள் !

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே,

வாழ்வுக்கும் பக்கம் வந்தேன், சாவுக்கும் பக்கம் நின்றேன்..
ஏனென்றால் காதல் என்பேன்...

காதல் கொண்டு நான் பேச, கத்தி கொண்டு நீ வீச... பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்.

கடலினில் மீனாக இருந்தவள் நான்,
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்..
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பி விட்டேன் என் கடலிடமே

இப்படி ஒவ்வொரு பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் அழகாய் மலர்கிறாள் “தாமரை” ! தாமரைக்கு பூ மாலை இடலாம் ! :) :) குறிப்பாய் …

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா…..

என்கிற வரிகளில் பெண்களின் MERCURY மனதை அழகாய் வரிகளில் பதித்தது அருமை ! MY Special appreciation for these lines….

Back to film…. "எனக்கும் கொஞ்சம் நடிக்க தெரியும்" என்று சிம்பு நிருபித்த இன்னொரு படம். அவளை தொடும் தருணங்களிலும் சரி, " நான் அவல தான லவ் பண்றேன்... இவன இல்லையே..." என்று சொல்லி JERRIE ku விடும் BOXING PUNCH layum சரி SIMBU CHARACTER ல் ஆண்மை தெறிக்கிறது .அவனை பிடிக்காதது போல் த்ரிஷா நடத்தும் பார்வை நாடகத்திலும் சரி, அவன் அணைக்கும் பொழுது தொட்டாசினுங்கியாகும் நேரத்திலும் சரி.. பெண்மை மலர்கிறது !

சுருக்கமாய் சொல்லவேண்டும் என்றால், இருவரும் அவர் அவருக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக பண்ணி இருக்காங்க.

த்ரிஷாவுக்கு குரல் கொடுத்த... To be more particular உயிர் கொடுத்தது சின்மயின் குரல். உண்மையாய் நான் த்ரிஷாவை ரசித்ததை விட, சின்மயின் குரலை தான் முதலில் ரசித்தேன். Her modulation in accord with mood of scene, intonation, all the pauses… etc., everything is awesome and so lovely ! இது சின்மயிக்கு அடுத்த பரிமாணம் ! அதிலும் நிருபித்து இருக்கிறார் !




நிறைய பேர் நிறைய சொல்றாங்க... “Sameera and Surya would have been a better choice for Karthick and Jessie”, என் வாதம் என்னவென்றால்... த்ரிஷா கையில் இருந்தாலும் சரி, கோவை சரளா கையில் இருந்தாலும் சரி, என் வீட்டு வேலைக்காரி கையில் இருந்தாலும் சரி... ரோஜா அழகு தான் ! கௌதமின் Direction அந்த ரோஜா :)

படம் பார்த்து முடிச்சா குறைகள் எல்லாம் பளிச்சுன்னு தெரியனும் … இரவில் தெரியும் நிலவின் முகம் போல்.......... அப்டி இருந்தா தான் அது தமிழ் படம் :) :). VTV ல் குறை சொல்வதே கஷ்டம் என்பதே பெரிய குறையாக தெரிகிறது........ ரொம்ப யோசிச்சு பார்த்தால், இவை மட்டும் தான் சொல்ல தோன்றுகிறது……..

முன் பாதியில் நடந்ததை பின் பாதியில் celluloid பதிக்க கார்த்திக் எடுக்கும் முயற்சி இனிமை !..... Already, Shankar’s BOYS la பார்த்ததுதான் என்றாலும்.. அப்பட்டமாக தெரியவில்லை..... அங்கு பாடல்கள், இங்கு காட்சிகள்.

கதை தளமும்,,, ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று இணையதளத்தில் படித்த ஞாபகம் ( அந்த படத்தில், காதலியின் நினைவாய்... அவன் நாவல் எழுதி தன்னை நிரூபிப்பான் போல் )

படம் start ஆனா உடனே சிம்பு தன்னை பற்றி சொல்லும் போது..... "நான் ஒரு Mechanical Engineer " நு சொல்லும் போது... "திரும்பவுமா கௌதம்..... ?????" நு தான் கேக்க தோணுது... உடனே ஞாபகம் வந்தது இது தான் .... “Gautham , May be u r a mech.. It doesn mean dat all ur heroes must also be... A 'Studious' Electronics Guy can very well fall in Love with a 'Stupid' CS Gal ;-)... ” (என் நண்பன் அவன் Blog ல் எழுதியது...) நல்ல வேலை கமலையும், சரத்தையும் Mechanical engineer ah காட்டல :)கொஞ்சம் avoid பண்ணுங்க கௌதம் ரொம்ப BORE அடிக்குது.

Its not a critic…. நான் Observe பண்ணது இதான். நீங்க எடுத்ததே 5 படம் தான்... அதுல 3 படத்துல (மின்னலே, காக்க காக்க, now VTV) ஹீரோ அவர பத்தி சொல்ற மாதிரி தான் படம் ஆரம்பிக்குது ! Is it kind of sentiment??? Next movies ல இந்த சாயம் வராம பார்த்துகோங்க.

I LOVE U, உன்னை நான் விரும்பறேன் இந்த இரண்டில் ஒரு வசனம் இல்லாமல் காதல் கதை பண்ண முடியாதது போல், _ _தா ன்ற வார்த்த இல்லாம உங்களால படம் பண்ண முடியாது போல கௌதம் ! கஷ்டம் ! Full-length divine movie எடுத்தா கூட அந்த வார்த்தை எப்டியாவது வந்துடும் போல. அதையும் கொஞ்சம் avoid பண்ணுங்க please !

சக்கரை பொங்கலுக்கு முந்திரி கிஸ்மிஸ் போல்
கதையில் தோன்றும் கணேஷ் கதாபாத்திரம்.... அத்தனை (நகைச்)சுவை

A few words from me, to u Gautham…. “Most beautiful part about Mani sir is: He handles every genre of movies with perfection, with ease and also he is master too…. MR. Impeccable. About u, Not in all genre but in romance u are in par with Mani ji… Ur way of handling romance is so romantic.. Hats off :) Keep doing same ! ”

ஈரம், பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், உன்னை போல் ஒருவன்....
என தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வதற்கான இன்னொரு சாட்சி VTV……….

மொத்தத்தில்... புல்லாங்குழலின் இசை, மார்கழி மாதத்தின் அதி காலை சூரியன், தோகை மயில், தென்றல், தாய் கரம் விட்டு விலகும் சிறு குழந்தையின் கண்ணீர் என அத்தனையின் கலவை இந்த விண்ணை தாண்டி வருவாயா... :) :) :)

Sunday, March 7, 2010

இவர் தான் தேனிசை தென்றல் :)

Compare the music in both the files.........

Deva சார் நீங்க இது வரைக்கும் எந்த படத்துக்கு சார் ஒழுங்கா music போட்டு இருக்கீங்க?? அப்டி எதாவது ஒரு படம், ஒரே ஒரு படம் இருந்த சொல்லுங்க.... Please...