Thursday, September 3, 2009

இரட்டை குழந்தைகள்......



(வைரமுத்துவின் "காதலும் மரணமும்" கவிதையால் ஈர்க்க பட்டு எழுதிய கவிதை ! )

காதலும், கவிதையும்
ஆம் இவை இரண்டும் ஒட்டி பிறந்த
இரட்டை குழந்தைகள் தான்!
தேகம் வேறு தான்
ஆனால் உயிர் ஒன்று...
பூக்கள் வேறு தான்
ஆனால் வாசம் ஒன்று....

இதோ! ஒரு ஒப்பீடு...

இரண்டும் உணர்வுகளின் வெளிப்பாடு
மனதின் தோரணம் !

உன்னை நீ உணர வேண்டுமா ?
இந்த இரண்டையும் உணர்...

கைகளைக் கோர்த்துக் கொண்டு காதலும்,
உணர்வுகளை சுமந்துக் கொண்டு கவிதையும்
தேடும் ஓர் இடம் தனிமை!!

இரண்டிலும் மரணம் அழைப்பது
பெற்றோரை தான்...
குழந்தைகளை அல்ல.
காதலில் காதலர்களும்,
கவிதையில் கவிஞனும்!

தமிழா உன் பழமொழி ஒன்று
பொய்யானதடா இரண்டிலும்...
"பழக பழக பாலும் புளிக்கும்"

கம்பன் முதல் கவியரசன் வரை
எத்தனை உயிர் கொண்டதோ கவிதைகள்?!
அத்தனை உயிர்களுக்கும்
முதல் எழுத்திட்டது காதல்!!!

இந்த இரண்டும் உன் அருகில் போதும்
இந்த பிரபஞ்சமே உன் அருகில்
கவிதையில் வார்த்தையில் !
காதலில் வாழ்கையில்!

ஜீவ ஊற்று உயிர் கொள்ளும் வரை
காதல் சுடர் அணைவதில்லை...
காதல் சுடர் நிலைகொள்ளும் வரை
கவிதை எனும் ஒளி அகல்வதில்லை!!